என் மலர்
செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் 1324 ஓய்வூதியதாரர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
ஊட்டி:
முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் ஊட்டியில் நடந்தது. மருத்துவ முகாமை நீலகிரி மாவட்ட கலெக்டர் சங்கர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
நீலகிரி மாவட்டத்தில் முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகள் பயன்பெறும் வகையில் அனைத்து வட்டங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக உதகை, குன்னூர், கூடலூர், வட்டங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.
இந்த முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, எலும்பு முறிவு மற்றும் பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்படுகிறது.
இவ்வாறு கலெக்டர் சங்கர் பேசினார்.
முகாமில் 1324 முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
அதில் 45 நபர்களுக்கு கண்புரை நோய் இருப்பதை உறுதி செய்து அதில் 5 நபர்களுக்கு கண்புறை அறுவைச் சிகிச்சை செய்து அவர்கள் தற்போது நல்ல நிலையில் உள்ளனர். மீதமுள்ள 40 நபர்களுக்கு கண்புரை நோய் இருப்பதை உறுதி செய்த மருத்துவர்கள் அதற்கான மேல்சிகிச் சைக்காக பரிந்துரை செய்தனர்.
முகாமில் ஊட்டி ஆர்.டி.ஓ.கார்த்திகேயன், அரசுத்துறை அலுவலர்கள், வருவாய்துறை அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டனர்.