என் மலர்

  செய்திகள்

  திருப்பூர் அருகே தண்டவாளத்தில் விரிசல்: பெரும் விபத்து தவிர்ப்பு
  X

  திருப்பூர் அருகே தண்டவாளத்தில் விரிசல்: பெரும் விபத்து தவிர்ப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பூர் அருகே இன்று காலை தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் அதிகாரிகள் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

  திருப்பூர்:

  திருப்பூர் ஊத்தக்குளிரோடு 2-வது ரெயில்வே கேட் அருகே இன்று காலை வழக்கம்போல் ரெயில்கள் கடந்து சென்றன. 2-வதாக ஒரு ரெயில் சென்றபோது அந்த பகுதியில் பயங்கர சத்தம்கேட்டதாகவும், குறிப்பிட்ட 2-வது கேட் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ஏதோ பிரச்சினை உள்ளதாகவும் என்ஜின் டிரைவர் திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

  விரைந்து வந்த ரெயில்வே அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்தை சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பது கண்டு பிடித்தனர்.

  இதனையடுத்து உடனே சென்னையில் இருந்து எர்ணாகுளம் நோக்கி வந்த எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னையில் இருந்து கோவை வரும் இன்டர் சிட்டி ரெயில் ஆகியவை ஈரோடு அருகே நடுவழியில் நிறுத்தப்பட்டது.

  பின்னர் உடனடியான ரெயில்வே ஊழியர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். தண்டவாள விரிசல் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, இன்னும் ஒன்று அல்லது இரண்டு ரெயில்கள் இந்த தண்டவாளத்தை கடந்திருந்தால் விரிசல் பெரிதாகி பெரும் விபத்து ஏற்படும் அபாயம் இருந்திருக்கும். உரிய நேரத்தில் என்ஜின் டிரைவர் தகவல் தெரிவித்ததால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.

  ரெயில் தண்டவாளத்தை பழுது பார்க்கும் வேலை நடைபெறுவதால் அந்த வழியே வரும் ரெயில்கள் தாமதமாக அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

  Next Story
  ×