என் மலர்

    செய்திகள்

    பனைக்குளத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி வாலிபர் தீக்குளித்து தற்கொலை
    X

    பனைக்குளத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி வாலிபர் தீக்குளித்து தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பனைக்குளத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், பனைக்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சாகுல் (வயது 36). இவருக்கு திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர்.

    ஆட்டோ ஓட்டிவந்த சாகுல், அதில் போதிய வருமானம் இல்லாததால் அந்த தொழிலை கைவிட்டு விட்டு சமீபகாலமாக ஒரு கடைக்கு வேலைக்கு சென்று வந்தார்.

    கடந்த 5 நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த சாகுல் வேலைக்கு செல்ல வில்லை. இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சாகுல், நேற்று மாலை தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

    உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை சாகுல் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தேவிப்பட்டிணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×