என் மலர்
செய்திகள்

தொப்பூர் அருகே வெண்ணீரில் விழுந்து 3 வயது குழந்தை பலி
தர்மபுரி அருகே வெண்ணீரில் விழுந்த குழந்தை பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் ஜருதி காலனி பகுதியை சேர்ந்தவர் மாதையன். இவரது மகள் அனுஸ்ரீ வயது (3).
சம்பவத்தன்று குழந்தை அனுஸ்ரீ வீட்டில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது குடிநீருக்காக பாத்திரத்தில் போட்டு வைத்திருந்த வெண்ணீரில் திடீரென குழந்தை விழுந்தது.
இதில் உடல் வெந்த குழந்தை அலறி துடித்ததது. இதை பார்த்த குழந்தையின் பெற்றோர் அனுஸ்ரீயை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அனுஸ்ரீ நேற்றிரவு பரிதாபமாக இறந்தது. இதை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர்.
சம்பவம் குறித்து தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story