என் மலர்

  செய்திகள்

  கரூர் அருகே பள்ளி மாணவியை கற்பழித்த வியாபாரி கைது
  X

  கரூர் அருகே பள்ளி மாணவியை கற்பழித்த வியாபாரி கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கரூர் அருகே 4-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை கற்பழித்த வியாபாரியை தோகைமலை போலீசார் கைது செய்தனர்.
  குளித்தலை:

  கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள  பேரூர்  உடையாப்பட்டி பகுதியை சேர்ந்த  சிறுமி  கலா (வயது 12, பெயர் மாற்றப்பட்டுள்ளது). அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். 

  கழுகூர் மேலகம் பேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 25). பாய் வியாபாரியான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. தமிழரசனும், கலாவும் உறவினர்கள் என்பதால் இருவரும் பழகி வந்தனர்.

  இந்நிலையில் ஆசை வார்த்தைகள்  கூறி,  கடந்த 6-2-2016 அன்று தமிழரசன், கலாவை பலாத்காரம் செய்தார். இதில் கலா கர்ப்பிணியானாள். இதையறிந்த  அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.  இதனிடையே மணப்பாறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கலாவுக்கு கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது.

  இந்நிலையில் கலாவை பலாத்காரம் செய்த  தமிழரசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் அமைப்பு சார்பில் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு  அனுப்பப்பட்டது. அது குறித்து நடவடிக்கை எடுக்க உத்த ரவிட்டதையடுத்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து  தமிழரசனை கைது செய்தனர். 
  Next Story
  ×