என் மலர்

  செய்திகள்

  வாணியம்பாடியில் இளம்பெண் தற்கொலை
  X

  வாணியம்பாடியில் இளம்பெண் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வாணியம்பாடியில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  வாணியம்பாடி:

  வாணியம்பாடி நியுடவுன் பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன். கட்டிட மேஸ்திரி. இவருடைய மகள் கவிதா (வயது 20). இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்றிரவு தனது அறைக்கு கவிதா தூங்க சென்றார்.

  இன்று காலை பெற்றோர் பார்த்தபோது, அறையில் தூக்குப்போட்டு கவிதா இறந்து கிடந்தார். வயிற்று வலியால் மகள் தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

  போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×