என் மலர்

  செய்திகள்

  பொங்கலுக்கு 11,270 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு
  X

  பொங்கலுக்கு 11,270 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 11,270 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
  சென்னை:

  தமிழர்கள் திருநாள் என போற்றப்படும் தைப்பொங்கல் பண்டிகை வருகின்ற ஜனவரி 14-ம் தேதி வருகிறது. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் வெளியூர்களில் இருந்து சென்னையில் வந்து தங்கி, வேலை பார்க்கும் பலரும் சொந்த ஊருக்கு சென்றிட ஆர்வம் காட்டுவர். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழியும்.

  இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு 11,270 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

  இதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 29 முன்பதிவு கவுண்டர்கள் அமைக்கப்படும் என்றும், சென்னையிலிருந்து 3 நாட்களுக்கு பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
  Next Story
  ×