என் மலர்
செய்திகள்

நைனார்கோவிலில் பிளஸ்-2 மாணவி மாயம்
நைனார்கோவிலில் பிளஸ்-2 மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.
ராமநாதபுரம்:
பரமக்குடி அருகே உள்ள நைனார்கோவிலை அடுத்த சிற்றேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகள் ரம்யா (வயது57).
ராமநாதபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று வீட்டில் இருந்த இவர், திடீரென மாயமாகி விட்டார். பல இடங்களில் தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து நையினார் கோவில் போலீசில் முனியசாமி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குப்பதிவு செய்து மாயமான ரம்யாவை தேடி வருகிறார்.
Next Story