என் மலர்

  செய்திகள்

  பழனி அருகே சிறுத்தை நடமாட்டம்: கிராம மக்கள் அச்சம்
  X

  பழனி அருகே சிறுத்தை நடமாட்டம்: கிராம மக்கள் அச்சம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பழனி அருகே சிறுத்தை நடமாட்டம் காணப்படுவதால் மலையடிவார கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

  பழனி:

  பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் மலைச்சாலையில் வரதமாநதி அணைக்கட்டு அண்ணாநகர் பகுதியில் கடந்த சில தினங்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதை ஆடு, மாடுகள் மேய்க்க சென்றவர்கள் பார்த்துள்ளனர்.

  இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். அந்த சிறுத்தையை பிடித்து அடர்ந்து வனப் பகுதிக்குள் விடவேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

  சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதுபதுங்கி இருக்கும் இடத்தை பார்த்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

  சிறுத்தை நடமாட்டத்தை பாரஸ்டர் தலைமையிலான குழுவினர் கண்காணித்து வருகின்றனர். மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றார். ஆனைமலை, முதுமலை வனப்பகுதியில் வறட்சி காரணமாக புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் பழனி வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்து வருகின்றன என்றும் குறிப்பிட்டார்.

  Next Story
  ×