என் மலர்
செய்திகள்

போலீஸ்போல் நடித்து வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்த திருமண புரோக்கர் கைது
ஊருக்கு செல்ல பணம் இல்லாததால் போலீஸ்போல் நடித்து வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்த திருமண புரோக்கரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
தாம்பரம்:
பம்மல், நல்லதம்பி சாலையில் டிப்-டாப் வாலிபர் ஒருவர் போலீஸ் என்று கூறி வாகன ஓட்டிகளை மடக்கி விசாரணை நடத்தினார். ஆவணங்கள் இல்லாத வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்தார்.
சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் சங்கர் நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து டிப்-டாப் வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர் செங்குன்றத்தை சேர்ந்த திருமண புரோக்கர் இளங்கோவன் என்பது தெரிந்தது. திருமண விஷயம் சம்பந்தமாக அவர் பம்மலுக்கு ஒருவரை சந்திக்க வந்துள்ளார்.
அங்கிருந்து ஊருக்கு செல்வதற்கு இளங்கோவனிடம் பணம் இல்லை. இதையடுத்து அவர் போலீஸ் போல் நடித்து வாகன ஓட்டிகளிடம் பணம் பெற்று ஊருக்கு செல்ல வசூல் வேட்டையில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து இளங்கோவனை போலீசார் கைது செய்தனர்.

Next Story