என் மலர்

  செய்திகள்

  மீஞ்சூர் சென்னை வாலிபர் கொலையில் 8 பேர் கைது
  X

  மீஞ்சூர் சென்னை வாலிபர் கொலையில் 8 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மீஞ்சூர் சென்னை வாலிபர் கொலையில் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

  பொன்னேரி:

  மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் வசித்து வந்தவர் அலெக்ஸ் (வயது 22). இவர் அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் பகுதியில் கத்தியால் குத்தியும், தலையில் கல்லைப் போட்டும் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

  சென்னை வியாசர்பாடியில் குடியிருந்த அவர் கடந்த 6 மாதத்துக்கு முன்பு அத்திப்பட்டுக்கு குடும்பத்துடன் இடம் பெயர்ந்து இருந்தார்.

  கொலை குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அத்திப்பட்டு புதுநகரை சேர்ந்த அப்துல் கரீம், சீனிவாசன், ரஞ்சித், தினேஷ், ஆறுமுகராஜ், கணேசன், கலையரசன், யுவராஜ் ஆகியோர் சேர்ந்து அலெக்சை கொலை செய்தது தெரிந்தது.

  இதையடுத்து அப்துல் கரீம் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். செல்போன் - பணத்தை பறித்ததால் தீர்த்துக் கட்டியதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

  கொலையுண்ட அலெக்ஸ் ரவுடி போல் அதே பகுதியில் உள்ள வாலிபர்களிடம் செல்போன், பணத்தை பறித்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

  சம்பவத்தன்று அப்துல் கரீமிடம் செல்போன் பறித்ததால் அவர் நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்து கட்டியது விசாரணையில் தெரியவந்தது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று கைதான 8 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

  Next Story
  ×