என் மலர்

  செய்திகள்

  ராமமோகனராவ் குற்றச்சாட்டு: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  X

  ராமமோகனராவ் குற்றச்சாட்டு: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிக்க வேண்டும் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேட்டியில் கூறியுள்ளார்.

  சென்னை:

  முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் இன்று பேட்டி அளித்தது தொடர்பாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர்.

  கேள்வி:- ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் சி.ஆர்.பி.எப். போலீஸ் தலைமை செயலகத்திற்குள் வந்திருக்க முடியாது என்றும், எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் குற்றம் சாட்டி இருக்கிறாரே?

  பதில்:- வருமான வரித்துறை என்பது மத்திய அரசின் கீழ் அமைந்திருந்தாலும் அதற்கு என்று தனி அதிகாரிகள், தனி சட்டம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும்.

  ஏற்கனவே பல நேரங்களில் மத்திய அரசினுடைய அதிகாரிகளுடைய அலுவலகங்கள், வீடுகளில் கூட இதுபோன்ற சோதனைகள் ஏற்கனவே நடந்திருக்கிறது. அதுமட்டுமல்ல தகுந்த உரிய ஆதாரங்களின் அடிப்படையில்தான் இந்த சோதனைகள் நடந்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகளும் சொல்கிறார்கள்.

  அதேபோல் மத்தியில் இருக்க கூடிய அமைச்சர்களும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையில்தான் அதற்குரிய ஆதாரங்கள் இருந்த காரணத்தினால்தான் தலைமை செயலகத்திலும் சோதனை நடந்திருப்பதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது.

  இதை விட இன்னொரு முக்கியம் என்னவென்று கேட்டால் இப்போதும் நான் தான் தலைமை செயலாளர் என்பதை அவருடைய பேட்டியில் சொல்லி இருப்பதாகவும் நான் கேள்விப்பட்டேன்.

  ஏற்கனவே சோதனை நடந்து கொண்டிருந்தபோது நான் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தேன். தலைமை செயலகம் வந்து சோதனை நடத்தப்படுகிறது என்று சொன்னால் ஏதோ இதில் ஒரு பெரிய மர்மம் இருக்கிறது. இதில் ஏதோ பூதாகரமான செய்தி வரப்போகிறது.

  எனவே இது குறித்து முதல்-அமைச்சராக இருக்க கூடிய ஓ.பன்னீர்செல்வம் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும், விளக்கம் சொல்ல வேண்டும் என்று அப்போது நான் அறிக்கையில் சொல்லி இருந்தேன். எனவே இப்போது நான் சொல்கிறேன். நான் தான் இப்போதும் தலைமை செயலாளர் என்று சொல்லக் கூடிய அளவுக்கு அவர் பேட்டி தருகிறார் என்று சொன்னால் இதற்கும் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்தான் பதில் சொல்ல வேண்டும்.

  கே:- ராமமோகனராவ் இப்போது திடீரென பேட்டி கொடுத்திருப்பது வருமான வரித்துறையினரின் விசாரணையை பாதிக்கும் என்று கூறப்படுகிறதே?

  ப:- இதற்கு நான் பதில் சொல்ல முடியாது. மத்திய அரசில் இருக்க கூடிய அமைச்சர்களோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ அல்லது வருமான வரித்துறை அதிகாரிகளோ தான் முன்னாள் தலைமை செயலாளர் சொல்லி இருக்கும் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல வேண்டும்.

  கே:- தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், வருமான வரி சோதனையில் பா.ஜனதா அரசின் பின்னணி இருப்பதாகவும் கூறப்படுகிறதே?

  ப:- இதற்கு ஒட்டு மொத்தமாக மத்திய அரசில் உள்ளவர்களும், பா.ஜனதா கட்சியில் உள்ளவர்களும் தான் பதில் சொல்லவேண்டும். நான் பதில் சொல்ல வேண் டிய தேவையும் இல்லை, அவசியமும் இல்லை. எனவே ஓ.பன்னீர்செல்வத்திடம் பேட்டி கேளுங்கள்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×