என் மலர்

    செய்திகள்

    ஊத்துக்கோட்டை கோஷ்டி மோதலில் 11 பேர் கைது
    X

    ஊத்துக்கோட்டை கோஷ்டி மோதலில் 11 பேர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஊத்துக்கோட்டை கோஷ்டி மோதலில் 11 பேரை போலீசார் கைது செய்து அவர்கள் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் முரளி விவசாயி. அதே பகுதியில் உள்ள கடையில் முக்கரம்பாக்கத்தை சேர்ந்த சிலர் புகையிலை கேட்டு தகராறில் ஈடுபட்டனர். இதனை முரளி கண்டித்தார்.

    இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. முரளியை எதிர் கோஷ்டியினர் தாக்கினர். மேலும் அவரது வீட்டையும் சூறையாடி விட்டு தப்பி சென்றுவிட்டனர்.

    இது குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த மோதல் தொடர்பாக முக்கரம்பாக்கத்தை சேர்ந்த சரவணன், அப்பு, தேவா உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    தொடர்ந்து அங்கு பதட்டமான நிலை நீடிப்பதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
    Next Story
    ×