என் மலர்
செய்திகள்

கோவையில்புதுப்பெண்ணிடம் ரூ.6 லட்சம் மதிப்புள்ள வைர நகை பறிப்பு
கோவையில் புதுப்பெண்ணிடம் ரூ.6 லட்சம் மதிப்புள்ள வைர நகையை மர்ம வாலிபர் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை:
கோவை கணபதி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் கர்ணா. ஸ்டூடியோ அதிபர். இவரது மனைவி தன்யா (வயது 22). இவர்களுக்கு திருமணமாகி 1 மாதமே ஆகிறது.
நேற்று நள்ளிரவில் தன்யா வீட்டு காம்பவுண்டுக்குள் துணிகளை காயப்போடுவதற்காக சென்றார்.
அப்போது வீட்டு காம்பவுண்டுக்குள் நுழைந்த வாலிபர் ஒருவர் தன்யா கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் வைர நகையை பறித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த தன்யா திருடன்...திருடன்... என சத்தம் போட் டார். அவரது சத்தம் கேட்டு தன்யாவின் குடும்பத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் நகை பறித்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. பறிக்கப்பட்ட வைர நகையின் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story