என் மலர்
செய்திகள்

காங்கயம் அருகே கார்-வேன் மோதல்: ரியல் எஸ்டேட் அதிபர் பலி
காங்கயம்:
கோவை செங்காளி பாளையத்தை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 56). இவர் தனது மனைவி நர்மதா (54) பேரன் அகில் (8), பேத்தி நிலா (4) மற்றும் நண்பர்களான பொள்ளாச்சி அருகே உள்ள வட்டமலை பாளையத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் செல்வராஜ் (46) மற்றும் கண்ணப்பன் (55) ஆகியோருடன் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் புறப்பட்டு சென்றார்.
அப்போது கார் காங்கயம் அருகே அகத்தீஸ்லிங்கம் பாளையம் என்ற இடத்தில் வந்த போது எதிரே வந்த வேன், கார் மீது மோதியது.
இதில் தாமோதரன் உள்பட 6 பேரும் காயம் அடைந்தனர். அனைவரும் சிகிச்சைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதில் பலத்த காயம் அடைந்த செல்வராஜை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் இறந்தார்.
இந்த விபத்து பற்றி காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.