என் மலர்

  செய்திகள்

  திருப்பூரில் குடிப்பதை தட்டிக்கேட்ட தந்தைக்கு கத்திக்குத்து: மகன் கைது
  X

  திருப்பூரில் குடிப்பதை தட்டிக்கேட்ட தந்தைக்கு கத்திக்குத்து: மகன் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பூரில் குடி போதையில் ஏற்பட்ட தகராறில் தந்தையை கத்தியால் குத்திய மகனை போலீசார் கைது செய்தனர்.

  திருப்பூர்:

  திருப்பூர் கண்ணகி நகரை சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 47). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் விஜய் (19). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். விஜய்க்கு குடிப்பழக்கம் இருந்தது.

  நேற்று இரவு குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது தந்தையும் குடிபோதையில் வீட்டில் இருந்தார். மகன் போதையில் வருவதை அறிந்த தந்தை அவரை தட்டிக்கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

  இதில் ஆத்திரமடைந்த மகன் அருகில் கிடந்த கத்தியை எடுத்து தந்தையை வயிறு, இடுப்பு, கழுத்து உள்ளிட்ட இடங்களில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த சுப்புராஜ் அலறி சத்தம்போட்டு ரத்தவெள்ளத்தில் சரிந்தார்.

  அதிர்ச்சியடைந்த அவரது குடுபம்பத்தினர் அவரை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தையை கத்தியால் குத்திய மகனை கைது செய்தனர்.

  Next Story
  ×