என் மலர்
செய்திகள்

திருவையாறில் வாகனம் மோதி பெண் காயம்
திருவையாறில் வாகனம் மோதி பெண் பலத்தகாயம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவையாறு:
திருவையாறு அருகே கீழப்புனவாசல் தாழடித்தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மனைவி செல்வி (42). இவர் சம்பவத்தன்று காலை திருவையாறு பேருந்துநிலையத்திலிருந்து திருக்காட்டுப்பள்ளி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அவரது பின்னால் வந்த வாகனம் மோதியதில் பலத்தகாயம் ஏற்பட்டது.
உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்.
இது குறித்து திருவையாறு சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Next Story