என் மலர்

  செய்திகள்

  புயலால் பாதிக்கப்பட்ட அகதிகள் முகாமில் பொன். ராதா கிருஷ்ணன் ஆய்வு
  X

  புயலால் பாதிக்கப்பட்ட அகதிகள் முகாமில் பொன். ராதா கிருஷ்ணன் ஆய்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புயலால் பாதிக்கப்பட்ட அகதிகள் முகாமில் மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
  செங்குன்றம்:

  கடந்த 12-ந் தேதி வீசிய வார்தா புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்கள் மிகுந்த சேதம் அடைந்தன. புயல் பாதித்த பகுதிகளில் தற்போது மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. சேதத்தை பார்வையிட மத்திய குழு சில நாட்களில் தமிழகத்திற்கு வர உள்ளது.

  இந்த நிலையில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று காலை புயலால் பாதிக்கப்பட்ட புழல் காவாங்கரையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை பார்வையிட்டார். அப்போது அங்கு உள்ள மக்கள் எங்களுக்கு கடந்த 2 மாதமாக உதவிதொகை வழங்கப்படவில்லை. சேதம் அடைந்த வீடுகளை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

  உடனே நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் உறுதி கூறினார்.

  பின்னர் சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியை பார்வையிட்டார். அப்போது புழல் ஏரியில் உள்ள தண்ணீர் அளவு குறித்து கேட்டரிந்தார். பின்னர் செங்குன்றத்தில் வார்தா புயலால் பாதிக்கப்பட்ட நவீன அரிசி ஆலைகளை பார்வையிட்டார். அப்போது தமிழ்நாடு நெல்- அரிசி சம்மேளனம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. பல அரிசி ஆலைகள் வங்கிகடன் மூலம் இயங்கி வருகிறது. தவணை தொகை சட்ட அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டன.

  இந்த கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உறுதி அளித்தார்.

  இந்த ஆய்வின் போது தமிழ்நாடு நெல்-அரிசி மொத்த வியாபாரிகள் சம்மேளன தலைவர் துளசிங்கம், பா.ஜ.க. மாநில துணை தலைவர் சக்கரவர்த்தி, மாவட்ட தலைவர் ஜானகிராமன், மாவட்ட பொதுசெயலாளர் செந்தில், செயலாளர் சென்னை சிவா, புழல் ஒன்றிய பொருப்பாளர் சுந்தரம், மாதவரம் தாசில்தார் முருகானந்தம், புழல் வருவாய் ஆய்வாளர் உமா மகேஸ்வரி, கிராம நிர்வாக அதிகாரி கோவிந்த ராஜ், செங்குன்றம் நெல்அரிசி வியாபாரிகள் சங்க செயலாளர் கோபி, துணை தலைவர் சாய் ஜெயபால், பொருளாளர் சந்திரசேகர் உள்பட பலர் உடன் சென்றனர்.
  Next Story
  ×