என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
வள்ளியூரில் அரசு பஸ் மீது கல்வீச்சு: வாலிபர் கைது
By
மாலை மலர்26 Dec 2016 4:56 AM GMT (Updated: 26 Dec 2016 4:56 AM GMT)

வள்ளியூர் பஸ் நிலையம் அருகே அரசு பஸ் மீது கல்வீசிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வள்ளியூர்:
நாகர்கோவிலில் இருந்து பாபநாசம் நோக்கி நேற்றிரவு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை நாகர்கோவில் கீழகிருஷ்ணன்புதூர் பகுதியை சேர்ந்த தியாகராஜன் (வயது43) என்பவர் ஓட்டிச்சென்றார்.
வள்ளியூர் பஸ் நிலையம் அருகே இந்த பஸ் சென்று கொண்டிருந்த போது ரோட்டோரம் குடிபோதையில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் பஸ்சை வழிமறித்தார். பஸ் நிற்காததால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் பஸ்சின் மீது கல்லை வீசி விட்டு தப்பியோடி விட்டார்.
இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து பஸ் டிரைவர் தியாகராஜன் வள்ளியூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பஸ் மீது கல் வீசியவர் வள்ளியூரை சேர்ந்த அந்தோணி மனோஜ் (31) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
×