என் மலர்

  செய்திகள்

  அருப்புக்கோட்டை-பந்தல்குடி சாலையில் கார் தீப்பிடித்து எரிந்தது 6 பேர் உயிர் தப்பினர்
  X

  அருப்புக்கோட்டை-பந்தல்குடி சாலையில் கார் தீப்பிடித்து எரிந்தது 6 பேர் உயிர் தப்பினர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேகமாக வந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதில் வந்த 6 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

  விருதுநகர்:

  வேலூர் சத்துவாச் சேரியை சேர்ந்தவர் ரசூல் மைதீன். இவரது உறவினர் திருமணம் திருநெல்வேலியில் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக குடும்பத்தினருடன் அவர் காரில் புறப்பட்டார்.

  திருமண விழாவில் பங்கேற்ற அவர்கள், அங்கிருந்து தூத்துக்குடி சென்றுள்ளனர். பின்னர் ஊருக்கு புறப்பட்டனர். காரில் 6 பேர் இருந்துள்ளனர்.

  நேற்று மாலை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பந்தல்குடி சாலையில் கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது காரில் இருந்து புகை கிளம்பி உள்ளது. இதனை கண்டதும் உடனடியாக கார் நிறுத்தப்பட்டது.

  அதற்குள், புகை தீயாகமாற 6 பேரும் காரில் இருந்து அவசர அவசரமாக இறங்கி ஓடினர். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. சரியான நேரத்தில் புகை வந்ததை கவனித்து இறங்கியதால், அதிர்ஷ்டவசமாக அதில் வந்த 6 பேரும் உயிர் தப்பினர்.

  இதுகுறித்து பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×