search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    12 செயற்கைகோள் தயாரித்து இஸ்ரோ மையம் சாதனை படைத்துள்ளது: மயில்சாமி அண்ணாதுரை
    X

    12 செயற்கைகோள் தயாரித்து இஸ்ரோ மையம் சாதனை படைத்துள்ளது: மயில்சாமி அண்ணாதுரை

    இஸ்ரோ செயற்கைகோள் மையம் மூலம் இந்தாண்டு 12 செயற்கை கோள் தயாரிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் இஸ்ரோ மைய இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இஸ்ரோ செயற்கைகோள் மையம் மூலம் மாதம் ஒரு செயற்கைக்கோள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணி தொடங்கியுள்ளது. இதன்படி இந்தாண்டு (2016) மாதம் ஒரு செயற்கைகோள் வீதம் 12 செயற்கைகோள் தயாரித்து அனுப்பி சாதனை படைத்துள்ளது. இது பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டு உள்ளது.

    இதுவரை 8 முழுமையான செயற்கைகோள்கள் தயாரிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்திய பல்கலைக்கழகத்திற்காக 4 செயற்கைக்கோள் தயாரித்து மொத்தம் 12 செயற்கைகோள் நமது நாட்டில் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு உள்ளது. இதனால் பல்வேறு பயன்பாடுகள் கிடைத்துள்ளன. குறிப்பாக சமீபத்தில் ஏற்பட்ட புயல் குறித்து முன்னெச்சரிக்கையை மிக துல்லியமாக சொல்ல முடிந்தது.

    இந்திய விண்வெளி ஆய்வு மண்டலத்தில் வெளிநாட்டு செயற்கைகோள் இல்லாமல் நம்ம நாட்டு செயற்கைகோள் அனுப்பட்டுள்ளது.

    சமீபத்தில் அனுப்பட்ட செயற்கைகோள் மூலம் இந்திய விவசாயம் நிலை, காட்டு வளம், கடல்பகுதியில் காற்று நிலை, காற்று திசை, காற்றின் ஈரப்பதம், காற்றின் வேகம் போன்றவற்றின் நிலை குறித்து தெளிவாக கணிக்க முடிந்தது.

    தொலைத்தொடர்புக்காக இன்சாட்-15, இன்சாட்-18 என இரண்டு செயற்கைக்கோள் அனுப்பப்பட்டு உள்ளது. இந்திய கப்பற்படைக்காக அனுப்பட்டு உள்ள 7 செயற்கைக்கோள் மூலம் நிலம், நீர், வானம் போன்றவற்றின் நிலை அறிய முடிகிறது.

    இதே போல் வரும் 2017ம் ஆண்டு செயற்கைக்கோள் உருவாக்க உள்ளோம். ஒரு தனி மனிதன் கூட விண்வெளியிலிருந்து செயற்கைகோள் மூலம் எப்படி விவசாயம், காற்று வளம், மழை வளம், தட்ப வெப்ப நிலை, நீர் நிலை, எந்த நேரத்தில் எங்கிருக்கிறோம் போன்றவற்றை அறிய முடியும்.

    இந்திய பல்கலைக்கழக மாணவர்கள் அதிகமாக பங்கு கொண்டு அதற்கான பணியில் ஈடுபட வேண்டும். தனியார் நிறுவனங்கள் பங்கு பெறும் வகையில் இந்திய செயற்கைக்கோள் மையம் தனது பணியினை செய்து வருகிறது. வரும் காலங்களில் வெளிநாட்டிற்கும் செயற்கைகோள் உருவாக்கி தரும் வகையில் பணியில் ஈடுபட்டு உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா கல்விநிறுவன தலைவர் சிவசுப்ரமணியம் உடனிருந்தார்.
    Next Story
    ×