என் மலர்tooltip icon

    செய்திகள்

    புத்தகம் வாங்க கூட பணம் இல்லாமல் செய்ததே மோடியின் சாதனை: முன்னாள் நீதிபதி சந்துரு கருத்து
    X

    புத்தகம் வாங்க கூட பணம் இல்லாமல் செய்ததே மோடியின் சாதனை: முன்னாள் நீதிபதி சந்துரு கருத்து

    கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி தற்போது மோடி செய்துள்ள சாதனை புத்தகம் வாங்க கூட பணம் இல்லாமல் செய்ததுதான் சாதனை என்று முன்னாள் நீதிபதி சந்துரு கருத்து தெரிவித்தார்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டில் நடந்த புத்தகத் திருவிழாவில் ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி சந்துரு கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி தற்போது மோடி செய்துள்ள சாதனை புத்தகம் வாங்க கூட பணம் இல்லாமல் செய்ததுதான்.

    பணத்தின் மதிப்பை இழக்கச் செய்து பலசிறு தொழில்களை நசுக்கியது போல் புத்தக விற்பனையையும் மோடி நசுக்கி விட்டார். கடந்த வாரம் மும்பை விமான நிலையத்தில் ஒரு புத்தகம் வாங்க என்னிடம் பணம் இல்லை. கிரடிட் கார்டு இருந்தும் அங்கு பயன் படவில்லை.

    நம்மிடம் பணம் இல்லாமல் ஆக்கிவிட்டு சிலர் வீட்டில் தங்கம், வெள்ளி மற்றும் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை எடுக்கின்றனர். பணம் இல்லாத பொருளாதாரம் என்று யாரைப்பார்த்து சொல்கின்றனர் என தெரியவில்லை.

    கோர்ட்டூர்புரம் அண்ணா நூலக கட்டிடம் ஆசியாவிலேயே பெரிய கட்டிடம். இதை கட்டி எழுப்ப ரூ.120 கோடிக்கு மேல் செலவானது. ஆனால் அந்த கட்டிடத்தை சிலர் இடிக்க முயற்சிக்கின்றனர்.

    நூலகத்தை இடிக்க வேண்டும் என்ற உணர்வு எங்கிருந்து வருகிறது? மக்கள் வாங்கமுடியாத கருத்து பெட்டகத்தை நூலகத்தில் இருந்துதான் பெறமுடியும்.

    நான்கு வருடங்களாக நூலக இயக்குனர் பதவி காலியாகவே உள்ளது. இதை நிரப்ப வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் யாரும் நியமிக்கப் படவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×