என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயங்கொண்டத்தில் லாரி மோதி 6 மின்கம்பங்கள் உடைந்தது
    X

    ஜெயங்கொண்டத்தில் லாரி மோதி 6 மின்கம்பங்கள் உடைந்தது

    ஜெயங்கொண்டத்தில் லாரி மோதி 6 மின்கம்பங்கள் முறிந்து விழுந்து மின்சாரம் நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ஜெயங்கொண்டம்:

    ஆந்திரா தெலுங்கானா மாநிலம் காண்டூரிலிருந்து நேற்று முன்தினம் கடப்பாகல் ஏற்றிக்கொண்டு ஜெயங்கொண்டம் வழியாக தஞ்சாவூர் நோக்கி டிரெய்லர் லாரி சென்றது. லாரியை வேலூர் மாவட்டம் சைதாபேட்டையை சேர்ந்த ஜெயராமன் மகன் கோதண்டராமன் (42) என்பவர் லாரியை ஓட்டிச்சென்றார்.

    கும்பகோணம் ரோட்டில் வேலாயுதநகர் அருகில் செல்லும்போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்து வலது புறம் சாலை அருகில் உள்ள மின் கம்பத்தில் மோதியது. லாரி மோதியவுடன் இந்த கம்பத்திலிருந்து மின்கம்பி செல்லும் கம்பங்களும் ஒன்றன்பின் ஒன்றாக விழுந்தன. இதில் கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசியதில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    உடனடியாக அருகில் இருந்தவர்கள் மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்ததல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்கம்பிகள் அறுந்து விழுந்த நேரத்தில் அவ்வழியே வாகனங்கள், பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெருத்த உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

    இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குபதிவு செய்து கோதண்டராமனிடம் விசாரித்து வருகின்றனர். லாரி மோதி சாய்ந்துபோன மின்கம்பம் மற்றும் கம்பிகளின் மதிப்பு சுமார் 20 ஆயிரம் இருக்கும் என மின்சாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். மின்கம்பங்கள் முறிந்து விழுந்து மின்சாரம் நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×