என் மலர்
செய்திகள்

குரோம்பேட்டையில் பெண்களிடம் செல்போன் பறித்த 10 மாணவர்கள் கைது
குரோம்பேட்டையில் பெண்களிடம் செல்போன் பறித்த 10 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தாம்பரம்:
குரோம்பேட்டை பகுதியில் தனியாக செல்போனில் பேசியபடி நடந்து செல்லும் பெண்களிடமும், ஆண்களிடமும் மோட்டார் சைக்கிளில் வரும் மர்ம நபர்கள் செல்போன்களை பறித்து சென்று விடுவதாக அடிக்கடி குரோம்பேட்டை போலீசுக்கு புகார்கள் வந்தன.
இதைத்தொடர்ந்து குரோம்பேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 சிறுவர்கள் வந்தனர்.
அவர்களை பிடித்து விசாரித்தனர். முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் குரோம்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
விசாரணையில் குரோம்பேட்டையை சேர்ந்த அவர்கள் 2 பேரும் 4 செல்போன்களை கொள்ளையடித்திருப்பது தெரிய வந்தது. மேலும் அவர்களது கூட்டாளிகளான அதே பகுதியை சேர்ந்த 8 சிறுவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 10 பேரும் மாணவர்கள். இவர்களிடம் இருந்து 13 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story