என் மலர்
செய்திகள்

வேதாரண்யத்தில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு கொண்டு வந்த செல்லாத நோட்டு பிரச்சினையை சரி செய்யக் கோரி பி.எஸ்.என். எல் . ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேதாரண்யம் தொலைதொடர்பு அலுவலக வாயிலில் பி.எஸ்.என்.எல் தொழிற்சங்க இளநிலைப் பொறியாளர் நாகரெத்தினம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நேஷனல் பெடரேசன் ஆப் டெலிகாம் கம்யூனிகேசன் மற்றும் பி.எஸ்.என்.எல் எம்ப்ளாயீஸ் யூனியன் செயலாளர் நாகராஜன், ராஜேந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்த செல்லாத நோட்டு பிரச்சினையை சரி செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story






