என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம் அருகே லாரிகள் மோதல்: 3 வாலிபர்கள் படுகாயம்
    X

    காஞ்சீபுரம் அருகே லாரிகள் மோதல்: 3 வாலிபர்கள் படுகாயம்

    காஞ்சீபுரம் அருகே லாரிகள் மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    வேலூர் மாவட்டம் ஆம்பூரில் இருந்து பப்பாளி பழங்களை ஏற்றிக் கொண்டு மினி லாரி ஒன்று சென்னை நோக்கி வந்தது. டிரைவர் சந்தோஷ் வண்டியை ஓட்டினார். உடன் நவீன். விமலநாதன் இருந்தனர்.

    இதேபோல் பெங்களுரு கே.ஜி.எப். பகுதியில் இருந்து காய்கறிகளை ஏற்றிய லாரி சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.

    அப்போது முன்னால் சென்ற மற்றொரு கனரக லாரியின் இடது பக்க டயர் திடீரென வெடித்து தாறுமாறாக சென்றது.

    இதனையடுத்து பின்னால் வந்து கொண்டிருந்த லாரி மற்றும் மினிலாரி தாறு மாறாக ஓடிய லாரி மீது பயங்கரமாக மோதியது.


    இதில் நடுவில் சிக்கிய மினிலாரி தலைகீழாக கவிந்து உருக்குலைந்தது. அதில் இருந்த டிரைவர் சந்தோஷ், நவீன் மற்றும் விமலநாதன் ஆகியோர் கேபினில் சிக்கி வெளிவர முடியாமல் உயிருக்கு போராடினர்.

    தகவல் அறிந்ததும் காஞ்சீபுரம் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து உயிருக்கு போராடிய 3 பேரையும் இரண்டு மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்டனர். அவர்கள் அனைவருக்கும் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் தற்போது பனி மூட்டம் அதிகமாக நிலவுகிறது. மேலும் அதிகாலை வேளைகளில் காய்கறிகள் மற்றும் கோழிகளை ஏற்றிக்செல்லும் லாரிகள் மற்றும் மினி லாரிகள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் கோழிலாரி ஒன்று விபத்தில் சிக்கி டிரைவர் இறந்தார். எனவே மினிலாரி மற்றும் லாரிகள் அதிவேகத்தில் செல்வதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றனர்.

    Next Story
    ×