search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடவாசல் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது
    X

    குடவாசல் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    குடவாசல் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    குடவாசல்:

    குடவாசல் அருகே கண்டிரமாணிக்கம் மெயின் ரோட்டில் வசிப்பவர் பாட்டையன் மகன் சந்திரமோகன் (வயது 32). இவர் பிலாவடியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வயலுக்கு சென்றுள்ளார்.

    1 மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிளை நன்னிலம் சாலையில் தள்ளிக்கொண்டு சென்றதாக கூறினார்கள். அதன் பேரில் தேடிய போது சித்தாடி செட்டித்தெருவை சேர்ந்த ரோக்தாஸ் மகன் ஆரோக்கியராஜ் (25), பாஸ்டின் மகன் ராஜ்குமார் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் பிடித்து குடவாசல் போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் செல்வம் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×