என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊத்துக்கோட்டை அருகே டிராக்டர் மோதி 3 மாணவர்கள் படுகாயம்
    X

    ஊத்துக்கோட்டை அருகே டிராக்டர் மோதி 3 மாணவர்கள் படுகாயம்

    ஊத்துக்கோட்டை அருகே டிராக்டர் மோதி 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள செங்கரை கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் மனோஜ்குமார் (18). இவர் கும்மிடிப்பூண்டி அருகே பெருவாயலில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்.

    இவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டார். வழியில் அதே கிராமத்தை சேர்ந்த சதீஷ் குமார்(13). கார்த்திக் (12) ஆகிய மாணவர்கள் ஏறிக் கொண்டனர். சதீஷ்குமார் கூளமேனியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-வது வகுப்பும், கார்த்திக் 7-வது வகுப்பும் படித்து வருகின்றனர். கூளமேனி பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் நொறுங்கியது. டிரைவர் டிராக்டரை சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார்.

    இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 மாணவர்களும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். இது குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×