என் மலர்

    செய்திகள்

    நெல்லை அருகே வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி: அண்ணன், தம்பி மீது புகார்
    X

    நெல்லை அருகே வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி: அண்ணன், தம்பி மீது புகார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நெல்லை அருகே வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்த அண்ணன், தம்பி குறித்து தொழிலாளி போலீசில் புகார் அளித்துள்ளார்.
    நெல்லை:

    நெல்லையை அடுத்த சுத்தமல்லியை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. கூலி தொழிலாளி. இவர் தனது மகனுக்கு வேலை தேடி வந்தார். இதற்காக பாளை ரஹ்மத்நகரை சேர்ந்த அண்ணன் தம்பியை அவர் நாடினார். அவர்கள் தட்சணாமூர்த்தி மகனுக்கு வேலை வாங்கி தருவதாக கூறியதோடு அதற்கு ரூ.5 லட்சம் வரை தேவைப்படும் என்றனர்.

    இதை நம்பிய தட்சணா மூர்த்தி 3 தவணையாக அந்த பணத்தை கொடுத்தார். ஆனால் 2 பேரும் வேலை வாங்கி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் தட்சணாமூர்த்தி கொடுத்த பணத்தை திரும்ப கேட்டார். அதற்கு அவர்கள் பணத்தை கொடுக்க மறுத்ததோடு தட்சணாமூர்த்தியை மிரட்டியதாக தெரிகிறது.

    மேலும் அண்ணன், தம்பி 2 பேரும் நெல்லையை சேர்ந்த பலரிடம் இதுபோல வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது. இதுபற்றி தட்சணாமூர்த்தி நெல்லை மாநகர போலீஸ் கமிசனரிடம் புகார் செய்தார். அவர் இதுபற்றி விசாரணை நடத்தி மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×