search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதுகாப்பு கேட்டு பெண் என்ஜினீயர் காதலனுடன் போலீசில் தஞ்சம்
    X

    பாதுகாப்பு கேட்டு பெண் என்ஜினீயர் காதலனுடன் போலீசில் தஞ்சம்

    மதனப்பள்ளியில் பாதுகாப்பு கேட்டு பெண் என்ஜினீயர் காதலனுடன் போலீசில் தஞ்சம் அடைந்தார்.
    ஸ்ரீகாளஹஸ்தி:

    மதனப்பள்ளி சின்னதிப்பசமுத்திரம் சாலையில் வசிப்பவர் காதர். இவருடைய மகன் முகமதுகவுஸ் (வயது 30), இவர் ஐதராபாத்தில் அரசு ஊழியராக வேலைபார்த்து வருகிறார். அதேபோல் விஜயவாடாவைச் சேர்ந்த ஜனவந்தராவின் மகள் சில்பா (28), இவர் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இருவரும், ஐதராபாத்தில் ஒரே இடத்தில் அருகருகே வசித்து வந்தனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களின் காதல் விவகாரம் சில்பாவின் குடும்பத்தினருக்குத் தெரிய வந்தது. இருவரும், வெவ்வேறு மதத்தைத் சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார் எதிர்ப்புத் தெரிவித்தனர். சில்பாவுக்கு, அவரின் பெற்றோர் வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினர்.

    இந்தநிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு முகமதுகவுஸ், சில்பா ஆகியோர் யாருக்கும் தெரியாமல் இந்து முறைப்படி ரகசிய திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் தம்பதி சமேதராக சின்னதிப்பசமுத்திரத்துக்கு வந்தனர். அங்கிருந்தபடி மதனப்பள்ளி சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்ய வந்தனர். இந்தத் தகவலை கேள்விப்பட்ட சில்பாவின் பெற்றோரும், உறவினர்களும் மதனப்பள்ளிக்கு வந்தனர்.

    மதனப்பள்ளிக்கு பெற்றோர் வந்திருப்பதாக கேள்விப்பட்டு சில்பா தனது காதல் கணவருடன் மதனப்பள்ளி 2-டவுன் போலீசுக்குச் சென்று தஞ்சமடைந்தார். இன்ஸ்பெக்டர் அனுமந்தநாயக்கிடம், காதல் திருமணம் செய்த எங்களுக்கு அச்சுறுத்தல் வருகிறது. எங்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது. எங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். சில்பாவின் பெற்றோரை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து, போலீசார் விசாரணை நடத்தி, அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×