என் மலர்
செய்திகள்

ரெயில் மோதி கூலித்தொழிலாளி பலி: போலீசார் விசாரணை
ரெயில் மோதி கூலித்தொழிலாளி பலியான சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 53). கூலித்தொழிலாளி. சரியாக காதுகேட்காது.
இவர் பீளமேடு- இருகூர் இடையே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக வந்த ரெயில் பழனிசாமி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story