என் மலர்

    செய்திகள்

    தண்ணீர் பிடிப்பதில் தகராறு: தொழிலாளிக்கு கத்திக்குத்து- பெண்கள் உள்பட 3 பேர் கைது
    X

    தண்ணீர் பிடிப்பதில் தகராறு: தொழிலாளிக்கு கத்திக்குத்து- பெண்கள் உள்பட 3 பேர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மதுரையில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளிக்கு கத்திக் குத்து விழுந்தது.

    மதுரை:

    மதுரை ஜெய்ஹிந்த்புரம் என்.எஸ்.கே.நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் மாரிச்சாமி, தொழிலாளி. இவரது மகள் மாலதி. சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றார்.

    அப்போது அங்கிருந்த நாகப்பிரியா, பாண்டியம்மாள் ஆகியோர் மாலதியை கேலி-கிண்டல் செய்துள்ளனர். இதுகுறித்து மாலதியின் தாய் தட்டிகேட்க, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் நாகப்பிரியாவின் கணவர் நம்பிதாஸ், உறவினர்கள் ஏன முத்து, பொன்ராஜ், குமார் ஆகியோர் மாலதியின் பெற்றோரிடம் தகராறு செய்தனர். அப்போது மாரிச்சாமியை அவர்கள் கத்தியால் குத்தினர். அதை தடுக்க வந்த கார்த்திக் வீரணன் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகப்பிரியா, பாண்டியம்மாள், சுப்பையா ஆகியோரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×