என் மலர்

  செய்திகள்

  சென்னையில் நகை வியாபாரி வீட்டில் ரூ.10 கோடி பழைய நோட்டுக்கள் சிக்கின
  X

  சென்னையில் நகை வியாபாரி வீட்டில் ரூ.10 கோடி பழைய நோட்டுக்கள் சிக்கின

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை சவுகார்பேட்டையில் நகை வியாபாரி வீட்டில் இருந்து ரூ. 10 கோடியை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்து உள்ளனர்.
  சென்னை:

  கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக மத்திய அரசு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்ததை அடுத்து வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு உள்ளிட்ட மத்திய விசாரணை முகமைகள் அதிரடி சோதனையை தீவிரப்படுத்தி வருகிறது. மத்திய விசாரணை முகமைகள் நடத்திவரும் அதிரடி சோதனைகளில் கோடிக்கணக்கில் புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் பெருமளவு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

  இந்நிலையில் சென்னை சவுகார்பேட்டையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ. 10 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

  நகை வியாபாரி இரானியின் வீடு மற்றும் கடையில் வருமான வரித்துறையினர் நடத்தி பறிமுதல் செய்த ரூ.10 கோடியும் பழைய ரூபாய் நோட்டுகள் ஆகும். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
  Next Story
  ×