என் மலர்
செய்திகள்

வேதாரண்யம் அருகே விஷம் குடித்து விவசாயி பலி
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த மருதூர் தெற்கு சேத்தி கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி (40). விவசாயி. இவருக்கு குடிபழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இவரது மனைவி ஜெயசுதா(35). அருகில் உள்ள பெண்கள் விடுதியில் சமையலராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 10-ந்தேதி முத்துசாமி மனைவி ஜெயசுதாவிடம் ஆஸ்பத்திரிக்கு செல்ல பணம் கேட்டுள்ளார். அதற்கு ஜெயசுதா உங்களிடம் கொடுத்தால் செலவு செய்து விடுவீர்கள். நான் வேலைக்கு சென்று திரும்பி வந்து அழைத்து செல்கிறேன் என கூறி வேலைக்கு சென்று விட்டார். முத்துசாமி யாரிடமோ கடன் வாங்கி கொண்டு வேதாரண்யம் அடுத்த முதலியார்தோப்பு- திருத்துறைப்பூண்டி மெயின்ரோடு, செக்போஸ்ட் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தாராம்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துசாமி கடந்த 17-ந்தேதி இறந்தார்.
ஜெயசுதா கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் பொறுப்பு அருணாசலம், சப்- இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முத்துசாமிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.






