என் மலர்

  செய்திகள்

  கருணாநிதியை சுற்றித்தான் அரசியல் மையம் இருக்கிறது: வடிவேலு
  X

  கருணாநிதியை சுற்றித்தான் அரசியல் மையம் இருக்கிறது: வடிவேலு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவிலேயே மிகப்பெரிய தலைவர் கருணாநிதி. இவரைச்சுற்றித்தான் அரசியல் மையமே இருக்கிறது என்று நடிவர் வடிவேலு பேட்டியளித்துள்ளார்.
  சென்னை:

  நடிகர் வடிவேலு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலம் பற்றி விசாரித்தார்.

  பின்னர் வடிவேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

  இந்தியாவிலேயே மிகப்பெரிய தலைவர் கலைஞர். இவரைச்சுற்றித்தான் அரசியல் மையமே இருக்கிறது.

  அரசியலுக்கே அவர்தான் பெரிய முன்னோடி. அவர் இல்லாமல் அரசியல் இயங்குவது நல்லா இருக்காது. வயதாகிவிட்டாலும் அவருடைய எண்ணம், சிந்தனை எந்த நேரமும் பலமாகவே இருக்கிறது.

  முதுமை காரணமாக சின்னச்சின்ன உடல் உபாதைகள் அவருக்கு இருக்கின்றன. அவர் இப்போதும் கடின உழைப்புடன் அரசியல், இலக்கியம் என தாம் சம்பந்தப்பட்ட எல்லா துறைகளிலும் நன்றாக செயல்பட்டு வருகிறார்.

  அவர் நன்றாக இருக்கிறார். வதந்திகளை நம்ப வேண்டாம். இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் வீடு திரும்புவார். நாங்கள் அவரை அருகில் சென்று பார்க்கவில்லை. அவரது குடும்பத்தினர், டாக்டர்களை சந்தித்தோம். அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.

  இவ்வாறு வடிவேலு கூறினார்.
  Next Story
  ×