என் மலர்
செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் 2½ கிலோ தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் 2½ கிலோ தங்கம் பிடிபட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆலந்தூர்:
சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சந்தேகத்திற்கிடமாக இருந்த 2 வாலிபர்களின் கைப்பையை சோதனை செய்த போது 1 கிலோ 100 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரிந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தங்கம் கடத்தி வந்தவர்கள் பற்றிய விபத்தை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். பிடிபட்ட 2 வாலிபர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
இதே போல் தாய்லாந்தில் இருந்து நேற்று இரவு சென்னைக்கு பயணிகள் விமானம் வந்தது. பயணிகளின் உடமைகள் வரும் கன்வேயர்பெல்ட் அருகே கேட்பாரற்று சூட்கேஸ் கிடந்தது. சந்தேகம் அடைந்த விமான நிலைய அதிகாரிகள் அதனை திறந்து பார்த்தனர்.
அதில் 1 கிலோ 300 கிராம் தங்கம் இருந்தது. அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து கடத்தல்காரர்கள தங்கம் இருந்த சூட்கேசை விட்டு சென்றிருப்பது தெரிந்தது. அந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
ஒரே நாள் இரவில் 2½ கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.72 லட்சம் ஆகும்.

Next Story