என் மலர்

  செய்திகள்

  தென் மாவட்டங்களில் 21, 22-ந் தேதிகளில் மழை பெய்யும்: வானிலை மையம்
  X

  தென் மாவட்டங்களில் 21, 22-ந் தேதிகளில் மழை பெய்யும்: வானிலை மையம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தென் கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் 21, 22-ந் தேதிகளில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
  சென்னை:

  தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை காலம் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் வடகிழக்கு பருவமழை தாமதமாகத்தான் தொடங்கியது. ஆனால் சராசரி அளவு மழை கூட பெய்யவில்லை. அதனால் பல மாவட்டங்களில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் இல்லாமல் விவசாயப்பணிகள் தொடங்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  அப்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக 38 செ.மீ. மழை சோழிங்கநல்லூரில் பெய்துள்ளது. இருப்பினும் மழை போதாது. குறைவாகவே பெய்துள்ளது. இந்தநிலையில் அந்தமான் தெற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ளது.

  வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:-

  அந்தமான் தெற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து தென் கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ளது. அதன் நிலை குறித்தும் அது எந்த திசை நோக்கி செல்கிறது என்றும் வானிலை மைய அதிகாரிகள் கண்காணித்து வருகிறோம். தமிழ்நாட்டில் நேற்று மழை எதுவும் பெய்யவில்லை. 21 மற்றும் 22-ந் தேதிகளில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்யும். வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.

  இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) தமிழகத்தில் வறண்ட வானிலை தான் நிலவும்.

  இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
  Next Story
  ×