என் மலர்

    செய்திகள்

    சேலம் அருகே அடுத்தடுத்து விபத்து: வியாபாரி உள்பட 2 பேர் பலி
    X

    சேலம் அருகே அடுத்தடுத்து விபத்து: வியாபாரி உள்பட 2 பேர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சேலம் அருகே அடுத்தடுத்து விபத்தில் வியாபாரி உள்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேச்சேரி:

    சேலம் மாவட்டம் மேச்சேரி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 25). இவர் செப்டிங் டேங் சுத்தப்படுத்தும் வேலை செய்து வந்தார்.

    நேற்று இவர் தனது மொபட்டில் தொளசம்  பகுதியில் இருந்து 5-வது மைல் பகுதியை நோக்கி புறப்பட்டு சென்றார். அப்போது, கிழக்கு ஓலைப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே வந்த டாரஸ் லாரி திடீரென மொபட்டின் மீது மோதியது.

    இந்த விபத்தில் சுப்பிரமணி மொபட்டுடன் டாரஸ் லாரியின் அடிப்பகுதியில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    சேலம் பெரமனூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 48). இவர் பழைய டயர் வியாபாரம் செய்து வந்தார்.

    நேற்று இவர் சொந்த வேலை காரணமாக தர்மபுரிக்கு சென்றார். பின்னர் வியாபாரம் வி‌ஷயம் தொடர்பாக ஒருவரை பார்க்க வேண்டி நள்ளிரவு வேளையில் அங்கிருந்து பஸ்சில் புறப்பட்டு தொப்பூரை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது தொப்பூர் சோதனை சாவடி வந்தது. இந்த சோதனை சாவடியில் இறங்கி மோகன்ரா அங்கிருந்த சாலையை கடக்க முயன்றார்.

    அந்த சமயத்தில், தர்மபுரியில் இருந்து வேகமாக வந்த கார் கண் இமைக்கும் நேரத்திற்குள் மோகன்ராஜ் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த 2 விபத்துக்குள் குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுப்பிரமணி மீது மோதிய டாரஸ் லாரி குறித்தும் மோகன்ராஜ் மீது மோதிய கார் குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×