என் மலர்
செய்திகள்

வாடகைக்கு குடோன் எடுத்து ரூ.1½ கோடி மதிப்புள்ள பொருட்களை பதுக்கி வைத்த கொள்ளையன்
கோவை அருகே வாடகைக்கு குடோன் எடுத்து ரூ.1½ கோடி மதிப்புள்ள பொருட்களை பதுக்கி வைத்த கொள்ளையனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணபதி:
கோவை அருகே உள்ள கோவில்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாகனங்கள், மற்றும் டயர்கள், வீடுகளில் பட்டு சேலைகள், லேப்டாப் ஆகியவை அடிக்கடி திருட்டு போனது.
இதுபற்றி விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரம்யா பாரதி தனிப்படை அமைத்து உத் தரவிட்டார்.
அதன்படி தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். அப்போது கோவை அருகே இடி கரையை சேர்ந்த கோழி இறைச்சி கடை நடத்தி வரும் கணேஷ் (வயது 33) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் கணேசும், அவரது நண்பர் டிவைனும் கோவில் பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைகளின் பூட்டை உடைத்து பல்வேறு பொருட்களை திருடி வந்தது தெரிய வந்தது.
இதைதொடர்ந்து கணேஷ், டிவைன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான கணேஷ், குரும்பபாளையம் பகுதியில் உள்ள திருமண மண்டபம் அருகில் ஒரு குடோனை வாடகைக்கு எடுத்துள்ளார். அந்த குடோனில் பல்வேறு இடங்களில் திருடிய 10 சொகுசு கார்கள், 200 டயர்கள், செல்போன்கள், பட்டுசேலைகள், லேப் டாப்கள் என ரூ,1½ கோடி மதிப்புள்ள பொருட்களை பதுக்கி வைத்துள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
தனிப்படை போலீசார் குடோனில் உள்ள திருட்டு பொருட்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
மேலும் இந்த திருட்டு வழக்கில் கணேசுடன் வேறு யாரும் தொடர்பு வைத்துள்ளார்களா? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story