என் மலர்

  செய்திகள்

  தர்மபுரி அருகே வங்கி நகை மதிப்பீட்டாளர் மீது தாக்குதல்
  X

  தர்மபுரி அருகே வங்கி நகை மதிப்பீட்டாளர் மீது தாக்குதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தர்மபுரி அருகே வங்கி நகை மதிப்பீட்டாளரை தாக்கிய அரசு பஸ் கண்டக்டர் கைதாகி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

  தர்மபுரி:

  தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள நல்லகுட்ல அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 36). இவர் கடத்தூரில் உள்ள ஸ்டேட் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக உள்ளார். இந்த வங்கிக்கு மடத அள்ளி பகுதியைச் சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் மகாதேவன் (50) வந்தார். அவர் வரிசையில் நிற்காமல் நேரடியாக வங்கிக்குள் வந்தார்.

  அவரை வரிசையில் வருமாறு சரவணன் கேட்டுக் கொண்டார். அப்போது அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மகாதேவன் திடீரென்று சரவணனை தாக்கினார். அவர் இது குறித்து கடத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மகாதேவனை கைது செய்து சொந்த ஜாமீனில் விடுதலை செய்தனர்.

  Next Story
  ×