என் மலர்
செய்திகள்

தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது: நடிகர் பிரபு பேட்டி
புயல் நிவாரண பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று தூத்துக்குடியில் நடிகர் பிரபு பேட்டியளித்துள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடிக்கு இன்று வந்த நடிகர் பிரபு நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் இரும்பு பெண்மணியாக திகழ்ந்தவர் முதல்வர் ஜெயலலிதா. அவர் எங்கள் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்து வந்தார். எனது அப்பாவுடன் அவர் நடித்த படங்கள் மறக்க முடியாதவை. துடிப்பான, துணிச்சலான, நிர்வாக திறமை வாய்ந்த தமிழகத்தின் வழிகாட்டியாக அவர் திகழ்ந்தார். அவரது மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பாகும்.
பணபரிமாற்றம் குறைந்துள்ளதால் தங்கம் விற்பனையும் குறைந்துள்ளது. ஆனால் விரைவில் இது சரியாகிவிடும். சில நாட்களுக்கு முன்பு சென்னையை ‘வார்தா’ புயல் தாக்கியது. நான் இதுவரை இப்படி ஒரு புயலை கண்டதில்லை. சென்னையில் கடும் பாதிப்பை இந்த புயல் ஏற்படுத்தி விட்டது.
எங்கள் வீட்டில் கூட 3 நாட்களாக கரண்ட் இல்லை. புயல் நிவாரண பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது. புயலால் விழுந்து கிடந்த மரங்களை வெகுவிரைவாக அப்புறப்படுத்தினர். தொடர்ந்து பாதிப்படைந்துள்ள மின் வினியோகத்தையும் விரைவாக சரி செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story