என் மலர்

  செய்திகள்

  திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் ஊழியர் வீட்டில் நகை கொள்ளை
  X

  திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் ஊழியர் வீட்டில் நகை கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் ஊழியர் வீட்டில் 12 பவுன் நகை கொள்ளை போனது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  திருவண்ணாமலை:

  திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் கணேசன் நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). குயிலம் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக உள்ளார்.

  சரவணனுக்கு தாமரை நகர் அண்ணா நகரில் மற்றொரு வீடு உள்ளது. அந்த வீட்டிற்கு சரவணன் நேற்று இரவு சென்றார். வேங்கிக்காலில் உள்ள வீடு பூட்டப்பட்டிருந்தது.

  நள்ளிரவு அங்கு வந்த மர்ம கொள்ளையர்கள் சரவணன் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவை உடைத்து அதில் இருந்த 12 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து தப்பினர். இன்று காலை வேங்கிக்காலுக்கு திரும்பிய சரணவன் தனது வீட்டு கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ந்து போனார்.

  உள்ளே சென்று பார்த்தபோது 12 பவுன் நகை, பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

  இது குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் சரவணன் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×