என் மலர்

  செய்திகள்

  கருணாநிதி உடல்நிலை: தம்பிதுரை, ஜெயக்குமார் ஸ்டாலினிடம் விசாரித்தனர்
  X

  கருணாநிதி உடல்நிலை: தம்பிதுரை, ஜெயக்குமார் ஸ்டாலினிடம் விசாரித்தனர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதி உடல்நிலை குறித்து அதிமுக சார்பில் தம்பிதுரை, ஜெயக்குமார் ஆகியோர் ஸ்டாலினிடம் விசாரித்தனர்.
  சென்னை:

  காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை பற்றி பல்வேறு கட்சி தலைவர்கள் விசாரித்து வருகிறார்கள்.

  இன்று காலை காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் விசாரித்தனர்.

  மதியம் 1.15 மணி அளவில் அ.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார் ஆகிய இருவரும் காவேரி மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு அவர்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நிலை பற்றி விசாரித்தனர்.

  மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.

  கருணாநிதி உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார். அவர் பூரண நலம் பெற எல்லாம் வல்ல அன்னை பராசக்தியை தான் பிரார்த்திப்பதாக அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
  Next Story
  ×