என் மலர்

  செய்திகள்

  மண்டைக்காட்டில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
  X

  மண்டைக்காட்டில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மண்டைக்காட்டில் பந்தல் கட்டும் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக விஷம் குடித்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  நாகர்கோவில்:

  மண்டைக்காடு சாரதாநகர் பகுதியை சேர்ந்தவர் சொர்னப்பன் (வயது 59). இவர் பந்தல் கட்டும் தொழில் செய்து வந்தார்.

  சம்பவத்தன்று இவர் மண்டைக்காடு கோவில் அருகே விஷம் குடித்து ஆபத்தான நிலையில் மயங்கிய நிலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

  இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி சொர்னப்பன் பரிதாபமாக இறந்தார்.

  இதுகுறித்து மண்டைக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சோபாஜென்சி வழக்குப்பதிவு செய்து எதற்காக விஷம் குடித்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
  Next Story
  ×