என் மலர்
செய்திகள்

தக்கலையில் 4 கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
தக்கலையில் 4 கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடியை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டார் இருளப்பபுரத்தை சேர்ந்தவர் தியாகு என்ற தியாகராஜன் (வயது 35).
இவர் மீது கோட்டார் போலீஸ் நிலையத்தில் இருளப்பபுரம் கார் டிரைவர் மணிகண்டன் கொலை வழக்கு, இருளப்பபுரம் சதீஷ் கொலை வழக்கு, சுசீந்திரத்தில் பிரபல ரவுடி சந்திர மோகன், பார் ஊழியர் ராமர் இரட்டை கொலை வழக்கு, கோவை ஆனைமலையில் கார்த்திகேயன் கொலை வழக்குகள் உள்ளது.
மேலும் கடையாலுமூடு, தக்கலை போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்பட சில வழக்குகள் உள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் தியாகு தூத்துக்குடி கோர்ட்டில் சரண் அடைந்தார்.
இதையடுத்து பாளையங்கோட்டை ஜெயிலில், அடைக்கப்பட்டு இருந்த அவர் நாகர்கோவில் ஜெயிலுக்கு மாற்றப்பட்டார். தியாகு போலீசார் எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர். அதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவானுக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் குண்டர் சட்டத்தில் தியாகுவை கைது செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து தியாகு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். நாகர்கோவில் ஜெயிலில் இருந்த அவரை பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.

Next Story