என் மலர்

  செய்திகள்

  ஆலங்குடி அருகே ஜெயலலிதா மறைவால் அ.தி.மு.க. தொண்டர் பலி
  X

  ஆலங்குடி அருகே ஜெயலலிதா மறைவால் அ.தி.மு.க. தொண்டர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆலங்குடி அருகே ஜெயலலிதா மறைவால் மனவேதனை அடைந்த அ.தி.மு.க.தொண்டர் பரிதாபமாக இறந்தார்.

  ஆலங்குடி:

  புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி ராஜாமணி. கடந்த 5-ந்தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து வெளிவந்த செய்தியை டி.வியில் பார்த்துள்ளார்.

  இதை தொடர்ந்து மனவேதனை அடைந்த ராஜாமணி உணவு, தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல் இருந்துள்ளார். உறவினர்கள் வற்புறுத்தியும் அவர் உணவு உட்கொள்ளவில்லை. இதனால் ராஜாமணி கடந்த 14-ந்தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.

  இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ராஜாமணிக்கு அஞ்சலி செலுத்தினர். ஜெயலலிதாவின் மறைவில் இருந்து சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த ராஜாமணியின் தியாகம் நெஞ்சை உருக்குவதாக உள்ளது.

  Next Story
  ×