என் மலர்

  செய்திகள்

  சூலூர் அருகே மகன் காதல் திருமணம் செய்ததால் தொழிலாளி தற்கொலை
  X

  சூலூர் அருகே மகன் காதல் திருமணம் செய்ததால் தொழிலாளி தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சூலூர் அருகே மகன் காதல் திருமணம் செய்ததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


  கோவை சூலூர் அருகே உள்ள சின்ன கமலம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் இவரது 2- வது மகன் யுவராஜ் (28). இவர் திருப்பூரில் உள்ள ஒரு மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

  யுவராஜ் கடந்த 12-ந் தேதி அதே மில்லில் வேலை பார்த்த ஒரு பெண்ணை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்தார். இதனால் ஆறுமுகம் மிகுந்த மனவேதனை அடைந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் கழிவறையில் வைத்து வி‌ஷத்தை குடித்தார். பின்னர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு பல்லடத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார்.

  இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×