என் மலர்
செய்திகள்

அரிசிப்பாளையத்தில் குடிநீர் குழாய் பதிப்பதில் மோதல்
சேலம்:
சேலம் அரிசிப்பாளையம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 60). இவர் சேலம் 27-வது டிவிசன் தி.மு.க. அவைத்தலைவராக உள்ளார். நேற்று இவர் அவரது வீட்டுக்கு அருகில் குடிநீர் குழாய் பதிக்க குழிபறித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்தவரும், 27-வது கோட்ட தி.மு.க செயலாளருமான ஸ்ரீகாந்த் வந்து குடிநீர் குழாய் பதிக்க எதிர்ப்பு செய்து தகராறு செய்தார். பின்னர் இருவரும் காரசாராமாக திட்டிக்கொண்டனர். அப்போது அங்கு ஸ்ரீகாந்தின் மகன் தனுஸ் வந்து அவரும் ராமலிங்கத்தை திட்டினார். பின்னர் ராமலிங்கம் தாக்கப்பட்டார்.
இதை அறிந்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் அங்கு வந்து இரண்டு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தாக்கப்பட்ட ராமலிங்கம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து ராமலிங்கம் சேலம் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.