என் மலர்

    செய்திகள்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடிக்க பணம் கொடுக்காததால் தொழிலாளி தற்கொலை
    X

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடிக்க பணம் கொடுக்காததால் தொழிலாளி தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடிக்க பணம் கொடுக்காததால் கோபித்து கொண்ட தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ராஜபாளையம்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் குலாலர் தெருவை சேர்ந்தவர் சுப்பையா (வயது 43), தொழிலாளி. இவரது மனைவி ராணி (35). இவர்களுக்கு லோகராஜ் (7) என்ற மகன் உள்ளான்.

    மதுவுக்கு அடிமையான சுப்பையா சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் மனைவியிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததால் பிரச்சினை ஏற்பட்டது.

    தொட்டியம்பட்டியில் செங்கல் சூளையில் வேலை பார்த்துவரும் ராணியிடம் குடிக்க பணம் கேட்பதற்காக நேற்று மதியம் சுப்பையா சைக்கிளில் சென்றார்.

    வேலை பார்த்து கொண்டிருந்த ராணியிடம் பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்தார்.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுப்பையா வி‌ஷம் குடித்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவர் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பையா இறந்தார்.

    இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×