என் மலர்

  செய்திகள்

  திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் மீண்டும் அனுமதி
  X

  திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் மீண்டும் அனுமதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  சென்னை:

  திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த காவேரி மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  கடந்த மாதம் 25ம் தேதி ஒவ்வாமை காரணமாக கருணாநிதி பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் தொண்டர்கள் அவரை பார்க்க வர வேண்டாம் என்று திமுக தரப்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

  அதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி கருணாநிதி காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் எடுத்துக் கொண்ட மருந்துகளின் ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

  அதனையடுத்து, ஒரு வார சிகிச்சைக்கு பின்னர் கடந்த டிசம்பர் 7-ம் தேதி கருணாநிதி வீடு திரும்பி இருந்தார். பின்னர் வீட்டில் இருந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

  இந்த நிலையில், சளித் தொல்லை காரணமாக மீண்டும் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  Next Story
  ×